தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை

peoplenews lka

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை

ஈராக் அரசாங்கம் சார்பில் இயற்றப்பட்டு இருக்கும் புதிய சட்டம், தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதன்படி ஈராக் அரசு இயற்றியிருக்கும் புதிய சட்டத்தின்படி தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

புதிய சட்டம் அந்நாட்டில் வசிக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது தாக்குதலாக அமைந்துள்ளது. தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை சட்டவிரோதமாக அறிவிக்கும் சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த சட்டம் ஈராக் சமூகத்தை ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளது.

தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் மற்றும் விபச்சாரத்தை ஒழிக்கும் புதிய சட்டத்தை மீறுவோருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள், அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தன்பாலின ஈர்ப்பு அல்லது விபச்சாரத்தை ஊக்குவிப்போருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share on

உலகம்

peoplenews lka

ஜனாதிபதியாக பதவியேற்ற விளாடிமிர் புதின்...

ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புதின் ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ளார்.  இவரது பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.. Read More

peoplenews lka

பேச்சுவார்த்தையை நிராகரித்தது இஸ்ரேல்...

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்... Read More

peoplenews lka

“தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்”...

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறது... Read More

peoplenews lka

தாய்வானின் நில அதிர்வு...

தாய்வானின் ஹுவாலியன் (Hualien) பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளது... Read More